Wednesday, 30 October 2013

மண்ணோடு
மடிந்துவிட்டாலென்ன
தினமும் உன் 
நினைவுகள்முன்
மண்டியிடுவதற்கு,
காற்றோடு
கலந்துவிட்டலென்ன
இரவுகளில் என்
கனவிலும்
கண்ணீர் வடிப்பதற்கு,

 ராஸ்கல் 
நிலவிடம்
சண்டையிட்டு
தோற்றுத்தான் போகிறேன்
ஜன்னலில்
தெரிவது
நிலவா?? இல்லை நீயா??? என்று

 ராஸ்கல் 
தேடிச்செல்வது
இருப்பதில்லை
தானாய் அமைவது
விடுவதில்லை

#rascal
அவள் கூந்தலில்
சிறைபட்டேன்
இருந்தும் 
ஆயுள் தண்டனைக்கு
பிரார்த்தனை

- ராஸ்கல் 
ஏங்கிப்போகிறேன்
உனை நினைத்தே...
கன்னம் வீங்கிபோகிறேன் 
கண்ணீர் சிந்தியே...
என் பக்கம்
வருவாயோ உயிரே..
உன்னபேர் பின்னால்
சேர்ப்பாயோ என் பெயரே..

 ராஸ்கல் 
இதயம் கொஞ்சம்
வேகமாய் துடிக்கிறது
சீக்கிரம் வந்தெடுத்துக்கொள்
நின்றுவிடப்போகிறது
நீ வராததால்...

 ராஸ்கல் 
"நீ வெயிலில்
வெளியே நடந்திடாதே
சூரியனுக்கும் உனை
சுட்டுவிட்ட 
குற்றவுணர்ச்சி வந்துவிடும்"

- ராஸ்கல்
இன்னொருதடவ
சிரிச்சிடாத..
தொலைக்குறதுக்கு
எங்கிட்ட இன்னொரு இதயம்
இல்ல.. 

ராஸ்கல் 
எட்டிப்பிடிக்கும் தூரத்தில்
இருந்திருந்தால்
காதல்
தன் பெருமை
இழந்திருக்கும்..
இன்னும் உயரத்தில்
இருப்பதே
நிலவுக்கும் அழகு
காதலிக்கும் அழகு....

#ராஸ்கல்
சிலருக்கு
காதல் தோல்வி ல
செத்துரலாம்போல 
இருக்கும் - எனக்கு
ஏற்கனவே 
செத்துட்டதுபோல இருக்கு 
வெறும் பிணமா இப்போ

ராஸ்கல்
எனக்காக 
பிறந்தவள்
பிரிந்தபின்பு
நான் ஏன்
பிறந்தேன் என
என்னையே
கேட்டுக்கொள்கிறேன்

ராஸ்கல்
எனைப்பார்க்கும்
உன் விழிகளைக்கண்டால்
பனியாய் இவன் உருகி நின்றேன்
இன்று
பாரா விழிகளால் நீ
பார்த்ததும் 
பேசாமலே
உடைந்துவிட்டேன்

ராஸ்கல்
நீ
போகும் 
பாதையெங்கும்
சிறு மணலாய்
கொட்டிக்கிடக்கின்றேன்
உன்னால் மிதிபட்டு
உன் பாதம் ஒட்டிக்கொள்ள

ராஸ்கல்
உன்னை பார்க்காதபோதும் நித்தம்
உன்னுருவம் என்முன்னே சுத்தும்
நெஞ்சுக்குள்ள வந்து கத்தும்
காதல் என்னும் அழகான பித்தம்

ராஸ்கல்
ஒவ்வொரு முறையும்
கிள்ளிப்பார்க்கிறேன் எனை
உன் விழிகள் 
பார்க்கும்போது
இது கனவில்லை என்று

-ராஸ்கல்
காதல் வைச்சேன்
அவளும் போய்ட்டா
நட்புனு சொன்னான்
அவன ஆளயே காணோம்
என்னடா நம்மக்குனு யாருமே இல்லயா
கடுப்பாகி வெறுப்புல
தூக்கி எரிஞ்சேன் கைபேசிய
அறைமணி நேரம் கழித்து
ஒரு மிஸ்டு கால்
எடுத்துப்பார்த்தேன்
"அம்மா"

 ராஸ்கல் 
யார் சமாதானம் 
செய்தும் நிறுத்தாமல்
அம்மாவைக்காணா
குழந்தைபோல..
அழுது தீர்க்கிறேன்..
உன் இன்மையால்

ராஸ்கல்
கொஞ்சமும் யோசிக்கல
நீ எங்கூட இல்லாத
நாட்களும்
என் வாழ்நாள்ல
இருக்கும்னு..
ரொம்ப சந்தோஷமா
இருகேன்னு
நடிக்கிறேன் 

 ராஸ்கல் 

Saturday, 26 October 2013

கண்ணமூடி படுத்துப்பார்த்தேன்
கொஞ்சமும் தூக்கமில்ல
முன்னப்பின்ன காதலுல
தோத்தெனக்கு பழக்கமில்ல
நெஞ்சு இப்போ வலிக்குதடி
உன காணாம துடிக்குதடி
கண்ணமூடி நான் கிடக்கிறேன்
திறந்தால் உன் முகம்தான் தெரியுதுடி...
மூடியிருக்கும் கண்கள்
ஒரேடியாய் மூடிவிட்டாலும்
நிம்மதியடி
எனக்குள்ளே இதயமாய்
துடித்தாய்...
சின்னச்சின்ன குறும்புகளாய்
வெடித்தாய்...
இருந்தும் ஏன் பெண்ணே
நடித்தாய்...
என் முன்னே பொய்யாய்
சிரித்தாய்...

 ராஸ்கல் 
ஏன் வந்தாய்
ஏன் தந்தாய்
கண்களிலே 
கண்ணீரை
நெஞ்சினிலே
சுமைகளை
ஏங்கிப்போகிறேன்
உனை நினைத்தே...
கன்னம் வீங்கிபோகிறேன்
கண்ணீர் சிந்தியே...
என் பக்கம்
வருவாயோ உயிரே..
உன்னபேர் பின்னால்
சேர்ப்பாயோ என் பெயரே..

<3 ராஸ்கல் <3

Wednesday, 23 October 2013

செத்துவிழுமிடம் உன் மடியெனில்
இன்னுமொரு நொடிகூட எனக்கு
உயிரோடிருக்க விருப்பமில்லை

- ராஸ்கல்
உன்னைச்சுற்றி வந்தேன்
உன் மேல்பட்ட காற்றாவது 
என்னைத்தீண்டட்டுமே என்று

ராஸ்கல்

Sunday, 20 October 2013

உன் புகைப்படத்தை
பார்த்தபின்னே
உறங்கச்செல்கிறேன்
நினைவினைப்போல்
கனவிலும் உனை
தரிசித்திட...
உனை நினைத்து
ஊண் உறக்கம் மறந்தேன்
காதல் வந்து
பித்தாகி அலைந்தேன்
எனை மறந்து
தனியாக சிரித்தேன்
நீதான் எந்தன்
உயிரென நினைத்தேன்
என் காதல்தனை
சொல்லாமல் தவித்தேன்
சொகத்திலேயே காதல்
கதையினையும் முடித்தேன்

 ராஸ்கல் 

Saturday, 19 October 2013

உன்னுடன் சேராத என காதலும்
இம்மண்ணோடு போகட்டும்
சொல்லாத என் வலியும்
இங்கே செல்லாமல் போகட்டும்
உனக்கான என் கண்ணீரும்
இன்றோடு கல்லாகிப்போகட்டும்
உன் காதலனாய் நானிருக்க
இன்று தகுதியையும் இழந்துவிட்டேன்
மரணிக்காமல் நரகம் போக
இன்று மனமின்றி துணிந்துவிட்டேன்"
"காதலில் விழுவது
ஒரு புதிய பிறப்பு எனில்
நான் ஒவ்வொரு நொடியும்
புதிது புதிதாய் 
பிறக்கிறேன் ஏனெனில்
உனைப்பார்க்கும்
ஒவ்வொரு நொடியும்
நான் காதலில்
விழுகிறேன்"

 ராஸ்கல் 
வேறயென்ன சொல்ல
நீதான்டி நெஞ்சுக்குள்ள- இனி
என்னோட உசுரு மெல்ல
செத்தாலும் கவலையில்ல

- கண்ணீருடன் ராஸ்கல்
"சில தூரம் நடந்தே
திரும்பிப்பார்க்கிறேன்
நான் மட்டும் 
தனித்திருப்பதாய் உணர்வு
தானாக கண்களில் கண்ணீர்
எங்கே நீ என்ற தேடல்
என்னருகே நிழலாய்
உன் நினைவுகள்
கண்களை துடைத்து
மீண்டும் நடக்கிறேன்
நினைவுகளே போதுமென்று...

- தனிமையில் ராஸ்கல் 

"சிந்திய முத்தும் அள்ளப்படாமல்
சொல்லிய சொல்லிங்கு புரியப்படாமல்
போகும் பாதையேதும் புத்திக்கெட்டாமல் 
காதலாம் மாயை அதில்
ஊடலாம் சிறு தீயை
கொண்ட மனம் எங்கே
கொண்டாட வலிமட்டும் இங்கே"
நின்றுவிட்டதா மழை
மேலே பார்க்கிறேன்,
சொல்லவந்த எதையோ
சொல்லாமல் போகிறேன்,
கையில் வைத்திருந்தே
வாடிவிட்ட மலரை
தொட்டு உணர்கிறேன்,
சொல்லத்தயக்கம் ஏனோ
வெட்கிப்போகிறேன்
எனக்குள் நொந்துகொள்கிறேன்..

- சொல்லப்படாத காதலுடன் ராஸ்கல்
சில நிமிட மௌனத்தின்பின்
சொல்ல வாயெடுக்கிறேன்
உன்னை காதலிப்பதாய்...
உதடுகள் அசைகிறதடி 
கொஞ்சமும் வார்த்தையின்
சத்தம் வரவில்லை,
வார்த்தைகள்தான் வேண்டுமா
என் காதல் சொல்ல
புரிந்துகொள்ளமாட்டாயா
என் விழிகளின் வலியை....

- ராஸ்கல்