Monday, 11 November 2013

மண்ணோடு
மடிந்துவிட்டாலென்ன
தினமும் உன் 
நினைவுகள்முன்
மண்டியிடுவதற்கு,
காற்றோடு
கலந்துவிட்டலென்ன
இராவுகளில் என்
கனவிலும்
கண்ணீர் வடிப்பதற்கு,
உன் கண்ணீர்
துடைத்திட ஆளின்றி
மண்ணைத்தொடுமெனில்
அது நான்
மண்ணுள் புதைந்த
பின்னர்தான் நிகழும்
ஒவ்வொரு நொடியும் உன்னை புதிது புதிதாய் காதலிக்கிறேன்
ஒவ்வொரு காதலிலும் உன்னை புதிது புதிதாய் உணர்கிறேன்
ஒவ்வொரு முறை உணரும்போதும் நான் இன்னும் புதிதாகவே..காதலிக்கிறேன்...
பேருந்தில்
முன் இருக்கையில் நீ
காற்று
உன் மல்லிகை
மணத்தோடு
உன் மனதையும்
அடித்து வரட்டும்.
என் வாழ்வின்
அர்த்தமாய்
நீயிருப்பாயென
நினைத்தேன்
ஆனால் ,
வெறும் நினைவுகள் மட்டும்
தந்து என்
வாழ்வை முடித்துவிட்டுச்
சென்றாய்
கண்விழிக்கும் போதும்
கண்ணுறங்கும் போதும்
கன்னியுன் முகம்
காணத்துடிக்குதடி
காணாமல் 
கண்ணீர் வடிக்குதடி
நீ என்னைவிட்டு
விலகி நடந்து சென்றது
இன்னும் என் கண்கள்
மறந்திடவில்லையடி
இத்தனை நாளாய்
அமைதி காத்தும்
உன் மனமென் காதலை
உணர்ந்திடவில்லையடி
உன்னை முற்றிலுமாக 
நீங்க சொன்னாய் ..
நீ சுவாசிக்கும் 
காற்றும் 
எனைச்சுற்றும் 
உன் நினைவுகளும்
இப்பூமியில் 
இருக்கும்வரை 
உன்னை நீங்க 
முடியாதடி
நீங்கி உயிர்வாழ 
முடியாதடி 
விழுந்துவிட்டதால் 
நான் இறந்துவிடமாட்டேன் 
இன்னும் சக்தியோடு 
எழுவேன்
வெற்றியை நோக்கி 
உன் நினைவுகள் 
வலியைத்தரவில்லை
இதையும் கடந்து 
வாழ்ந்துவிடு என்ற
வெறியைத்தருகிறது
எத்தனையாயிரம் 
துன்பங்கள் வந்தாலும் 
எதிர்த்து நிற்க 
துணிச்சலுள்ளது 
ஆனால் உன்
மௌனத்தின் 
முன்னால் மட்டும்
தோற்றே நிற்கின்றேன் 
அழகான கவிதைகள்
பொய்களென்றால்
பெண்களை 
கவிதையோடு
ஒப்பிடுவதில்
தப்பில்லை
எவனோ
இசைத்த இசையும்
என்னால் சிக்கித்தவிக்கும்
கவிதை வரிகளுமே
என் தனிமைக்கு
ஆறுதல்..
உயிர்கூட நீ
சொன்னால்
விட்டுத்தருவேனடி 
என் காதலையல்லவா
கேட்கிறாய் 
நான் என்செய்வேனடி 
இரவே தன்னால்தான்
அழகாம்
அன்பே நீ ஜன்னலுக்கு வா 
நிலவின் கர்வத்தை
அடக்க,
"சிறு விழியாலே 
எதோ களவாடி ..
உயிர் வலியாலே 
தினம் உறவாடி 
நான் வேண்டாம் என்றால் 
என்னை வம்பிழுப்பாள் 
வேணும் என்பேன் ...அவள் வர மறுப்பாள்
இருக்காளா..இங்கே ..இருப்பாளா ??
சென்றுவிட்டாள் என சொன்னபோதும் ..
செல்லவில்லை மனம் எங்கேயும் "
கண்ணில் சுரக்கும்
நீர் கன்னத்தில் 
வழிவதற்குள்
உன் கரங்கள் 
துடைத்திட வேண்டும்,
உடல் தளர்ந்து 
மண்ணில் சரிவதற்குள் 
உன் தோள்கள்
தாங்கிட வேண்டும்
அன்பே !! 
"எனதருகே நெருங்கி அமர்ந்துகொண்டாள்.. எதுவும் பேசாமல் தோள் சாய்ந்துகொண்டாள்... கையோடு விரல்களும் கோர்த்துகொண்டாள் சற்று முகம் உயர்த்தி என்னை பார்த்தாள் 'என்ன?' என்பது பொல நானும் கண் காட்டினேன்.... 'ஒன்றுமில்லை' என சொல்லி என்மேல் சாய்ந்துகொண்டாள்....... என் மனது வேறு எதையும் யொசிக்கவில்லை இந்த நிமிடம் போதும் என்றே நிருத்திக்கொண்டது"
உன் விழி சேரவே 
ஒரு வழி தேடியே 
என் வாழ்கை இங்கே 
கொஞ்சம் 
திணறுதடி..
என் தமிழ் வரிகள்
உன் காலடியில் 
செத்துக்கிடக்கின்றன 
உயிர் கொடு 
இல்லையேல் 
என்னையும் கொன்றுவிடு 
" சொல்லிவிட்ட சில நொடிகள்
என்னுள் சிறகு முளைத்துப்பறக்க 
உன் முடிவை சொன்னதும் 
என்னுயிர் கீழ்வீழ்ந்து துடிக்க " 
சொல்லிவிட்டாய் நீ 
என் இன்மையை உணர்வதாய் 
என்னால் சொல்ல முடியவில்லை 
நான் தனிமையில் அழுததை 
காதலை கண்ணீரால் 
வெளியேற்ற முடியுமெனில் 
இந்நேரம் ஆயிரம் காதல்கள் 
வெளியேற்றப்பட்டிருக்கும்
அவ்வளவு அழுதுவிட்டேன் 
ஒரு காதலுக்காக 
உன் இதயத்திற்கு 
அம்பு விட 
இங்கே என் இதயம் 
காயப்பட்டு நிற்குதடி 
திட்டித்தீர்த்து சென்றுவிடுகிறாய் ,
"கோவத்தில் உன் கன்னம் இன்னும் 
சிவக்கிறதடி '' என குறுந்தகவல் அனுப்பினேன் 
" நீயெல்லாம் திருந்தவேமாட்டடா " உன்னிடமிருந்து 
"ஆமாம் " என்னிடமிருந்து 
"ரொம்ப கோவமா இருக்கேன்" உன்னிடமிருந்து 
" நான் ரொம்ப பாவமா இருக்கேன் " என்னிடமிருந்து 
உடனே ஒலித்தது என் கைபேசி 
உன் பெயர் தாங்கி...
" லூசு " உன்குரல் 
கேட்டதும் கனிந்தது காதல்.. 
மறக்கமுடியாத தருணங்கள் 
மனதில் இருக்கும் வரை 
மரணம் கூட 
அமைதி தந்திடாது 
மறக்கமுடியாத தருணங்கள் 
மனதில் இருக்கும் வரை 
மரணம் கூட 
அமைதி தந்திடாது 
ஒரு துளி கண்ணீர் போதாதா 
என் காதல் உண்மையென சொல்ல 
என் இதயத்தின் ஒரு துடிப்பு போதாதா 
உள்ளிருப்பது நீ மட்டுமென சொல்ல 
என்னால் தாங்க முடியாமல்
என் துயரங்களை 
கண்களுக்குள் அடக்கி வைத்தேன்
கண்களும் என்ன செய்யும் பாவம்
அழுது தீர்த்துவிட்டது
கண்ணீராய்..
விட்டுக்கொடுத்து 
நான் நின்றும் 
என்னை விட்டுவிட்டு 
போகிறாயடி
விழிகளில் 
நீர் தவழ 
என்னை வெறுத்து 
போகிறாயடி 
கோவங்கள் எதன்மீதானபோதும் 
காதல் பெரிதல்லவா
சிறு காரணம் சொல்லி 
பிரிவது தவறல்லவா